கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த இசக்கிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் அவருடைய சகோதரர் கோபியை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் நடந்த கோர சம்பவமாகவே கருதுகிறேன். கந்துவட்டி கொடுத்தவர்கள், இசக்கி முத்துவிடம் மேலும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் போலீசில் புகார் செய்தார். போலீசார் கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவாக கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளனர். வேறுவழியின்றி இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்தார். இசக்கிமுத்துவிற்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கு காரணமான போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்வதோடு, கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மக்களுக்கு போலீசார் மீதான நம்பிக்கை இழப்பு ஏற்படும்.
MDMK General Secretary Vaiko condemns Police department for not implementing the Usury interest act strictly.Vaiko visits Nellai Hospital, enquires about Esakimuthu's health